மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திமுகவினரின் விமர்சனங்களுக்குத் தனது பாணியிலேயே நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் யாரோ ஒருவர் தன்னையோ அல்லது தனது தந்தையையோ பார்த்துப் பயமில்லை என்று பேசியதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

​மேலும், தன்னைப் பார்த்துப் பயமில்லை என்று சொல்வதை ஒரு விமர்சனமாகத் தான் பார்க்கவில்லை என்றும், மாறாகத் தனது ஜனநாயக அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவே கருதுவதாகவும் மோடி கிண்டலாகக் குறிப்பிட்டார். “பாவம், அவர்கள் தெரியாத்தனமாக எனக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டார்கள்” என்று அவர் கூறியபோது கூட்டத்தில் பலத்த சிரிப்பொலியும் கைதட்டலும் எழுந்தது. இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.