இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகின்ற 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு டி20 போட்டிகளில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டுக்கும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு நாள் தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக சிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளது கேலிக்குறியானது. சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி போட்டியின் போது சதம் அடித்தார். ஆனாலும் இந்தப் போட்டியில் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் என்னுடைய இதயம் இந்த இளம் பையனை பார்த்து மிகவும் வருத்தம் அடைகிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
