இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இரு போட்டிகளிலும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இதற்கு தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியா அணியினருடன் சுமூகமாக செல்ல மாட்டார் என்று கூறப்படுகிறது. அதோடு அவருடைய தலைமையில் விளையாடுவதை விட சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடினால் நிச்சயம் இந்திய அணியினர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதோடு கௌதம் கம்பீரும் இதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் தான் டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
