ஆட்சியமைக்க உரிமை கோரி தவெக அளித்த கடிதத்தில் நடந்த ஒரு மெகா குளறுபடி இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 108 எம்.எல்.ஏ-க்களின் தனிப்பட்ட ஆதரவு பட்டியலுக்கு பதிலாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பெயரையும் சேர்த்து தவெக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஒரு சிறு பிழையால், தனித்து ஆட்சியமைக்கும் மனு, ‘கூட்டணி ஆட்சி’ கோரும் மனுவாக மாறி ஆளுநர் மாளிகையில் சிக்கியுள்ளது.
இந்த விவகாரத்தால் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெறும் எழுத்துப் பிழையா அல்லது காங்கிரஸை இழுக்க போடப்பட்ட திட்டமா என விவாதங்கள் அனல் பறக்கின்றன. ஒரு தவறான லிஸ்ட், ஆட்சியமைக்கும் கனவில் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
