தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு “மெகா” பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது! 108 இடங்களை வென்றும் ‘மேஜிக் நம்பரை’ தொட முடியாமல் தவெக திணறி வரும் சூழலில், பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாகத் தகவல் வெளியாகி அதிரவைத்துள்ளது.

இந்தத் தகவலால் கொதிப்படைந்த தவெக எம்.எல்.ஏ-க்கள், “மக்களின் தீர்ப்புக்கு எதிராக இப்படி ஒரு அநியாயக் கூட்டணி அமைந்தால், நாங்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம்” என அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்த நிலையில், பதவியைக் காப்பாற்றிக்கொள்ள திராவிடக் கட்சிகள் ஒன்று சேர்வதா? என விஜய் தரப்பு செம காண்டில் இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை தவெக எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக ராஜினாமா செய்தால், தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருமா அல்லது ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா எனத் தெரியாமல் ஒட்டுமொத்த மாநிலமே இப்போது திக் திக் நிலையில் உறைந்து போயுள்ளது!