தமிழக அரசியலில் மெஜாரிட்டி யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிரடி பேச்சு, கோட்டை வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது.
“விஜய்யோடும் தவெக எம்.எல்.ஏ-க்களோடும் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமையும் வரை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புதுச்சேரி ரிசார்ட்டிலேயே முகாமிட்டிருப்பார்கள் எனப் பகீர் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
தவெக-வுடன் கைகோர்த்துத் தமிழக அரசியலைப் புரட்டிப் போடத் துடிக்கும் காங்கிரஸின் “பதவி வெறி” கனவை எடப்பாடி பழனிசாமி தவிடுபொடியாக்குவார் என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
மேலும், “சி.வி.சண்முகம் உள்ளிட்ட 3 பேரைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடியின் ஒற்றை உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள்; அண்ணா காங்கிரஸை வெளியேற்றியது போல், இப்போது எடப்பாடியார் ஒரு ‘மெகா’ பிளானோடு களமிறங்கியுள்ளார்” என அன்பழகன் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும்; பதவி வெறியில் தமிழக அரசியலை புரட்டிப்போட முயலும் காங். முயற்சியை ஈபிஎஸ் முறியடிப்பார்”
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் #Puducherry #ADMK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/ktgNrYdLSL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 7, 2026
“>
விஜய்க்கு முட்டுக்கட்டை போடுவது ஒருபுறம் இருந்தாலும், அடுத்த சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு புதிய ஆட்சி அமைய வாய்ப்பிருப்பதாக அவர் சூசகமாகத் தெரிவித்திருப்பது, தவெக மற்றும் திமுக கூடாரங்களை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
