அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் “இந்திய கணவர் தேவை” என எழுதிய பிளே கார்டுடன் நின்ற ஒரு இளம்பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த பெண்ணின் வினோதமான இந்த செயல், அந்த பகுதியில் நடமாடி கொண்டிருந்த  பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெறும் சில நொடிகளில் அந்த இடத்தில் கூடியிருந்த  பார்வையாளர்கள் அனைவரும் அவரைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.

“உண்மையான  காதல் எங்கு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாத புதிர்தான்” என்ற நிலையை பிரதிபலிக்கும் விதமாக, இவ்வாறு நேரடியாக பிளே கார்டுடன் நின்றது பலரையும் சிரிக்கவைக்கும் வகையில் அமைந்தது.

இந்நிலையில், அவரது பிளே கார்டை பார்த்தவுடன், அங்கு இருந்த ஸ்பைடர்மேன் வேடம் அணிந்த ஒருவர் அருகில் வந்து நின்றது மேலும் பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் கேமராக பதிவாகி, இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by 🎓⚠️⇝𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 Ṃᵉ𝒉𝒌ʍ𝖆 æłē⇝⚠️ (@students_mehkma22)

“>

தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதன் மூலம், அந்த பெண் யார்? ஏன் இந்திய கணவரைதான் விரும்புகிறார்? என்பன தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகங்களில் வலுப்பெற்றுள்ளன. இதுவரை அந்த பெண்ணின் பெயர் அல்லது பின்னணி தெரியவில்லை என்றாலும், இந்திய கலாசாரம், குடும்பப் பாரம்பரியம் ஆகியவற்றை மதிக்கும் மனப்பான்மை காரணமாகவே இந்தத் தேர்வை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு இணையத்தில் வைரலாகும் நிலையில், கமெண்ட் பிரிவில் நெட்டிசன்கள் வேகமாக பங்கேற்று வருகின்றனர். ஒருவர், “இந்திய காதல் கதைகளுக்கு காரணம் ஷாருக்கான் திரைப்படங்கள்தான்” எனக் கிண்டல் செய்துள்ளார்.

மற்றொருவர், “இந்திய ஆண்கள் நல்ல டீயும், நல்ல உறவுகளும் கொடுப்பவர்கள்” என புகழ்ந்துள்ளார். மேலும், இந்திய சினிமா, கிரிக்கெட் மற்றும் உணவுகள் அந்த பெண்ணை ஈர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

சிலர், “அனைத்து கணவர்களும் திருமணத்துக்குப் பிறகு ஒரே மாதிரியாகிவிடுவார்கள்” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.