வடகொரியாவில் மக்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புதிய உத்தரவுகள் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே, அந்நாட்டில் மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்கும், அந்நாட்டு ஆடைகளை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மேலும் கடுமையான கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் சில ஆங்கில வார்த்தைகளும் இனி வடகொரியாவில் உபயோகிக்கக் கூடாது என அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி, ‘ஹாம்பர்கர்’, ‘ஐஸ்கிரீம்’ உள்ளிட்ட பலவிதமான ஆங்கில வார்த்தைகள் பொது இடங்களில் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய கலாசாரம் மற்றும் மொழியை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், இளைஞர்கள் மேற்கத்தியப் பண்பாட்டு பாதிப்பில் சிக்காமல் இருக்க வாய்ப்பு ஏற்படும் எனவும், தமது நாட்டின் அடையாளங்களை பேண வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த உத்தரவு தொடர்பாக கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
