காட்டில் இரை மற்றும் வேட்டையாடும் நேரடி சண்டைகள் நாள் முழுவதும் நடக்கும். சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை தங்களது வயிற்றை நிரப்ப வேட்டையாட, மற்ற விலங்குகள் உயிர் காக்க ஓடிக்கொண்டு இருக்கின்றன. இத்தகைய ஒரு சாகசமான காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த காணொளி, வனவிலங்குகளுக்கிடையே நடக்கும் ஒரு அசாதாரணமான சம்பவத்தை பதிவு செய்துள்ளது. இதில், ஒரு பெண் சிங்கம் ஒரு குட்டி யானையை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபடுகிறது. அது தனது பிடியில் குட்டி யானையை பிடித்து கொண்டு இருந்த அதே நேரத்தில், திடீரென ஒரு பெண் யானை அங்கு வந்தது.

 

 

View this post on Instagram

 

A post shared by Wildfriends Africa (@wildfriends_africa)

வீடியோவில், சிங்கம் குட்டி யானையின் மீது ஏறிக்கொண்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. ஆனால், தாய் யானையின் அணுகுமுறையை கண்டதும், சிங்கம் அதிர்ச்சியடைந்து, தனது இரையை விட்டுவிட்டு பயந்தவாறே இடத்தைவிட்டு ஓடுகிறது. அதன் பிறகு, குட்டி யானை தாயின் பாதுகாப்புக்குள் நுழைகிறது. இந்தக் காட்சி காட்டின் சட்டங்கள் எதுவாக இருந்தாலும், தாயின் பாசத்துக்கு முன் எந்த ஆபத்தும் நிற்க முடியாது என்பதைக் காட்டுகிறது.

மேலும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் @wildfriends_africa என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இது 46,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான நெட்டிசன்களிடம் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.