சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்து நேற்று  காலை  மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், எதிர் நீச்சல் சீரியலில் நடிகர் மாமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வேல ராமமூர்த்தியின் கம்பீரமான குரல், மிரட்டும் தோரனை என ஆதி குணசேகரனுக்கு மறு உயிர் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.