சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட  இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்து நேற்று காலை  மாரடைப்பால் காலமானார். சென்னையில் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் இறுதி ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலகத்தில் மாரிமுத்துவின் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரிமுத்துவின் மகன் கூறுகையில், யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் இது. இதில் இருந்து நாங்கள் மீண்டு வர முயற்சி செய்து கொண்டுள்ளோம். சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்துகொண்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என உருக்கமாக பேசினார்.