தமிழ் சினிமாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி. அதற்குப் பிறகு தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், இவருடைய லேட்டஸ்ட் காதல் அறிவிப்பு ஒன்று தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் தீயைப் போலப் பரவி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ஆன்மீகப் பேச்சாளரான மகா விஷ்ணுவைத்தான் தான் காதலிப்பதாக மிருணாளினி ரவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காதல் பதிவில், “உங்களைக் காதலிக்கத் தொடங்கும்போது, என்னை நானே காதலிப்பது போல உணர்ந்தேன்; ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்” என்று மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகை, சர்ச்சைகளில் சிக்கிய ஆன்மீகப் பேச்சாளர் மகா விஷ்ணுவுடன் தொடர்பில் இருப்பதும், அவரைக் காதலிப்பதாக உலகறியச் சொல்வதும் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த அறிவிப்பைக் பார்த்த பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்தச் ஜோடி குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக டிரெண்டாகி வருகிறது.
