தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நாளை (மே 4) வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில் முக்கியக் கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகிதம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக 92.08% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களம் கண்ட கொளத்தூர் தொகுதியில் 86.12% வாக்குகளும், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 89.74% மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 74.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதோ, அங்குக் முடிவுகள் சாதகமாக இருக்குமா அல்லது எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.