தமிழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்பிற்கான (TNEA 2026) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 03) கோலாகலமாகத் தொடங்கியது.
விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, சுமார் 8,505 மாணவர்கள் பொறியியல் படிப்பிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 1,008 மாணவர்கள் தங்களின் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ள நிலையில், 299 மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை வெற்றிகரமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
முதல் நாளிலேயே விண்ணப்பங்கள் இவ்வளவு வேகமாக வந்து குவிந்துள்ளதால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான போட்டி அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
