சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபரிடமிருந்து சந்தேகத்திற்குரிய செய்தி வந்துள்ளதா? அல்லது வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத ஒருவர் உங்களைப் பாராட்டினாரா? கவனமாக இருங்கள்..

உடனே எதிர்வினையாற்றாதீர்கள். வாட்ஸ்அப்பில் பல பயனர்களை பாதிக்கும் புதிய வகை ஆன்லைன் மோசடியான ‘WhatsApp Honey Trap Scam’ இன் ஒரு பகுதி இது. இந்த மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் பயனர்களுடன் காதல் இணைப்பை உருவாக்கி கொள்ளையடிக்க வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர்.