திருச்சி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தங்களை “மற்றும் பலர்” என்று ஒற்றை வரியில் கடந்து சென்றதை நினைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நெஞ்சம் உருகிப் பேசியுள்ளார்.

“எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்த ஒரு மாபெரும் இயக்கத்தின் பெயரைக்கூட உச்சரிக்க உங்களுக்கு மனசில்லை; நாங்க என்ன தீண்டத்தகாத கட்சியா? உங்களோட இந்த அலட்சியத்தை எங்களால தாங்கவே முடியல தம்பி விஜய்” என்று ஆர்.பி.உதயகுமார் மிகுந்த வேதனையோடும் ஆதங்கத்தோடும் கொட்டித் தீர்த்துள்ளார்.

சினிமாப் புகழில் வந்துவிட்டு, இத்தனை ஆண்டுகால தியாக வரலாறு கொண்ட அதிமுகவை இப்படி அவமதிப்பது நியாயமா என்று அவர் எழுப்பியுள்ள உணர்ச்சிப்பூர்வமான கேள்வி, இப்போ சோசியல் மீடியாவில் அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே படுபயங்கர விவாத நெருப்பைப் பற்ற வச்சிருக்கு..!

“>