திருச்சி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய அதிரடிப் பேச்சுக்கு, அதிமுகவைத் தொடர்ந்து இப்போ ஆளுங்கட்சியான திமுகவின் முன்னணி முகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா படுபயங்கரமான பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 02) செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதல்வர் விஜய்யை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்துள்ளார். “மேடைகளில் நக்கல், நையாண்டி பேசி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை நீங்களாகவே குறைத்துக் கொள்ளாதீர்கள்; விஜய்யின் பேச்சில் கொஞ்சம் கூட அரசியல் முதிர்ச்சி இல்லை” என்று ஓப்பனாகக் கிழித்தெறிந்துள்ளார்.

மேலும், “ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நான்தான் ஒரே தலைவர் என்று சும்மா பில்டப் கொடுக்காதீர்கள்.. உங்களை வெறும் 35% மக்கள்தான் ஆதரித்துள்ளார்கள், ஆனால் மீதமுள்ள 65% மக்கள் உங்களை வேண்டாம் என்று மொத்தமாக நிராகரித்துள்ளனர்” என அதிரடி புள்ளிவிவரத்தோடு மெகா குண்டு ஒன்றையும் தூக்கிப் போட்டுள்ளார். விஜய்யின் திருச்சி உரைக்கு எதிராக  அதிமுகவை தொடர்ந்து திமுக தரப்பிலிருந்து  இந்த எதிர்ப்பு வந்துள்ளது