அதிமுகவை உடைக்க பார்த்தால் திமுக இல்லாத நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்ய முடியும்?.

திறமையற்ற பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். திமுக கார்ப்பரேட் நிறுவனம். ஸ்டாலின் தலைவர், இயக்குனர்களாக உதயநிதி, கனிமொழி உள்ளனர். 22 மாதங்களில் மக்கள் விரோதத்தை சந்தித்த ஒரே கட்சி திமுக என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.