இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அவர் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் திமுக எனக்கு எதிரி, அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலூரில் தற்போது 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருப்பதால் நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் வேலூரை ஊட்டி போல குளுகுளுவென மாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.