ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) கான்ஸ்டபிள் ஒருவர், ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவரை தாக்கி, சாமான்களுடன் வெளியே தள்ள முயன்ற அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
42 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், அதிகாரி பயணியை கடுமையாக தாக்கும் நிலையில் , “சாரி சார்” என்று அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டாலும், அவரது உடைமைகளை தூக்கி வீசும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இது யாரும் எதிர்பாராத விதத்தில் மக்கள் கோபத்தையும் அதிர்ச்சியையும் கிளப்பி வருகிறது.
இந்த வீடியோ X தளத்தில் பயணிகள் ஆதரவு கணக்கு ‘RailwaySeva’க்கு அனுப்பப்பட்டது. உடனடியாக அந்த கணக்கு, RPF வடக்கு ரயில்வே மற்றும் ஜெய்ப்பூர் பிரிவை டேக் செய்து, நடவடிக்கை எடுக்க கோரியது. பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரி RPF ரிசர்வ் லைனில் உள்ளவராக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
लड़का बिना टिकट के यात्रा कर रहा है तो जुर्माना कर दो!! या हमेशा की तरह रिश्वत लेकर सलटा दो!! या फिर अगले स्टेशन पर उतार दो!! मगर चलती ट्रेन से फेंकने जैसी हरक़त क्यों? वर्दी पहने हो तो ख़ुदा हो गए क्या?@RailMinIndia@RPF_INDIA @RPFCR pic.twitter.com/5HpJZ8nvHK
— SANJAY TRIPATHI (@sanjayjourno) August 20, 2025
“>
ரயில்வே அதிகாரிகள், சம்பவம் ஆகஸ்ட் 18 அன்று டெல்லி சராய் ரோஹில்லா–ஜோத்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது என்றும், 3AC டிக்கெட் முன்பதிவு செய்த பயணியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே சட்ட பிரிவு 141-ன் கீழ் வழக்குப் பதிந்துள்ளதுடன், காவலரின் செயல் கட்டுப்பாடின்றி நடந்ததைக் கண்டித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Kindly look into this matter @rpfnr_ @RpfNwr PNR-2721044291 – RPF India
— RailwaySeva (@RailwaySeva) August 19, 2025
“>
பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது பயணிகள் நிம்மதிக்கு எதிரானது எனவும், இது போன்ற சம்பவங்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
