உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்த அரவிந்த் குமார் படேல், ரீனா தேவி என்றவருடன் 25 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களுக்கு ஒரு திருமணமான மகளும், 18 வயதான மகனும் உள்ளனர்.
ஆனால், கடந்த சில காலமாக ரீனா தேவியின் நடத்தை சரியில்லாததால் சந்தேகம் கொண்ட கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, இந்நிலையில் தான் சியாராம் யாதவ் என்ற வீட்டில் வாடகைக்குடியிருந்த வணிகர் ஒருவருடன் மனைவிக்கு இருந்த தவறான உறவைப் பற்றி அறிந்து அதிர்ந்துவிட்டார். சியாராம், ரீனாவுடன் அதே வீட்டில் வசித்து, மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து, கோபமாகவோ வன்முறையில் ஈடுபடாமல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டார் முன்னிலையில் பேசிப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார் அரவிந்த். அதன்படி, தனது மனைவிக்கும், அவளது காதலனான சியாராமுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இது ஒரு சாதாரண முடிவு அல்ல; தனக்குத் துரோகம் செய்தவளின் விருப்பத்தை மதித்து, அமைதியாக தீர்வு கண்ட அரவிந்தின் செயல்முறை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
➡️ चंदौली
➡️ पत्नी प्रेमी के साथ रंगेहाथ पकड़ी गई
➡️ पति अरविंद ने दोनों की कराई शादी
➡️ पत्नी को प्रेमी के गले में डलवाई वरमाला
➡️ पति ने मंदिर में दोनों की करवाई शादी
➡️ चंदौली के हामिदपुर का मामला#Chandauli #WifeCaught #LoveMarriage #Hamidpur @chandaulipolice pic.twitter.com/tuGMNQyhfr— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 19, 2025
“>
பின்னர், அவர்கள் அனைவரும் வாரணாசியின் உள்ள மகாதேவ் கோயிலுக்கு சென்று, பாரம்பரிய முறையில் ரீனா மற்றும் சியாராமுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
“இது காதல், புரிதல் மற்றும் மனிதநேயத்தின் அரிதான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
