உத்தரபிரதேச மாநிலம் ராய்பரேலியில் இருந்து, “Microsoft Tech Support” என்ற பெயரில் அதிர்ச்சிகரமான  இணைய மோசடி ஒன்று நடத்தப்பட்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘NanoBaiter’ என்ற பெயரில் செயல்படும் இணைய பயனர், தன்னை மைக்ரோசாஃப்ட் உதவிப் பணியாளராக காண்பித்து , பொதுமக்களிடம் பணம் பறிக்கும் ஒருவரை நேரில் பிடித்து, அவருடைய நடவடிக்கைகள் அனைத்தையும் சாமர்த்தியமாக  பதிவேற்றியுள்ளார்.

“>

 

அத்துடன் இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பதையும் நனோபைட்டர் தெளிவாக விளக்கியுள்ளார். பயனரின் கணினியில் “உங்கள் தரவுகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது, உடனே மைக்ரோசாஃப்ட் உதவியை அழைக்கவும்” என்று போலியான பாப்அப் (popup) ஒன்று தோன்றும்.

“>

 

அவ்வாறு பயந்து அழைக்கும் பயனரிடம், மோசடியாளர் AnyDesk, TeamViewer போன்ற வழிகளின் மூலம் கணினியில் நுழைந்து, பணம் கோருகிறார். ஆனால் இந்த முறையில் நனோபைட்டர் தன்னுடைய லேப்டாப்பை வெர்ச்சுவல் மெஷினாக அமைத்து, மோசடியாளருக்கே ஷாக் கொடுத்துள்ள சம்பவம் திருப்புமுனையாக அமைந்ததுதான் சுவாரசியம்.

“>

 

அவர் கணினியில் நுழைந்தபின், மோசடியாளரின் வெப்காமை அவனுக்கே தெரியாமல் இயக்கி அவனுடைய முகம், பெயர் (Gaurav Trivedi), இடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை துல்லியமாக எடுத்துள்ளார். பின்னர், இந்த மோசடியாளர் எப்படி தினமும் சாப்பிடுகிறார், தூங்குகிறார், மற்றும் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பதையும் தனது கணினி வழியாக நேரடியாக பார்த்ததாக நனோபைட்டர் கூறுகிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியான பின்பும், அவர் ராய்பரேலி போலீசாரை டேக் செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“>

 

இது போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மோசடிகள் இன்று பலரை சிக்கவைத்து வருகின்றன. மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இணையத்தில் செயல்பட வேண்டிய அவசியம்  என இந்த சம்பவம் விளக்குகிறது.