தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின் நடத்தையில் நரசிம்மாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று காலை வசந்தாவேலைக்குச் சென்றபோது, அவரை நடுரோட்டில் வழிமறித்த நரசிம்மா மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நரசிம்மா, மறைத்து வைத்திருந்த கோடாரியால் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றியதுடன், நரசிம்மாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் நடந்த இந்த கொடூரக் கொலை அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
