1912-ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கிய உலகையே உலுக்கிய டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்பவருக்குச் சொந்தமான தங்கக் கடிகாரம் ஒன்று தற்போது சாதனை விலைக்கு ஏலம் போயுள்ளது.

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்ட இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு, டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத் தொகையாகச் சாதனை படைத்துள்ளது. இந்தக் கடிகாரத்தின் ஏலத்தின் மூலம், டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத் தொகை ரூ.35 கோடியைத் தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.