ஜப்பானில் ஒரு சுவாரசியமான விதிமுறை உள்ளது. அங்கு விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் பேக்கெட்டில் உள்ள உண்மையான படம் இருக்க வேண்டும். அதாவது, பாக்கெட்டில் உள்ள பொருள் எப்படி இருக்கிறதோ, அந்த அளவிலும் அப்படியும் தான் வெளியில் புகைப்படம் வைக்க வேண்டும். இல்லையென்றால், அது சட்ட விரோதமாகக் கருதப்படும். இந்த விதியால் வாங்குபவர்கள் ஏமாறாமல் இருப்பார்கள்.

இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இந்த விதிமுறையை விளக்கி காணொளி பதிவிட்டுள்ளார். அது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் இந்த கடுமையான விதிகள் அந்நாட்டை மிகவும் நம்பகமான இடமாக்கியுள்ளன.