ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் முக்கிய ஆலோசகரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளருமான அலி ஷம்கானியின் மகள் பாத்திமாவின் திருமண வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி உள்ளது.
கடந்த ஆண்டு தெஹ்ரானில் உள்ள ஆடம்பரமான எஸ்பினாஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், மணமகள் வெள்ளை நிற மேட்ரன் கவுன் அணிந்து மேடைக்கு வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் இசை ஒலிப்பதோடு, பெண்கள் ஹிஜாப் அணியாமல் திரண்டிருப்பதும், மேற்கத்திய பாரம்பரியமாக தந்தை தனது மகளை மேடைக்கு சுமந்து செல்வதும், ஈரானிய இஸ்லாமிய சட்டங்களுக்கு முற்றிலுமாக முரணானதாகக் கூறப்படுகிறது.
The daughter of Ali Shamkhani one of the Islamic Republic’s top enforcers had a lavish wedding in a strapless dress. Meanwhile, women in Iran are beaten for showing their hair and young people can’t afford to marry. This video made millions of Iranian furious. Because they… https://t.co/MAb9hNgBnN pic.twitter.com/WoRgbpXQFA
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) October 19, 2025
“>
இந்நிலையில், பலரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மூன்று முக்கிய காரணங்களால் விமர்சனமனப்போக்கில் உள்ளனர்.
ஒன்று – நாட்டின் பெரும்பாலான மக்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருப்பது;
இரண்டாவது – இஸ்லாமிய சட்டங்களை வலியுறுத்திய ஷம்கானியின் குடும்பம், அதையே மீறியிருப்பது; மூன்றாவது – மேற்கத்திய கலாச்சாரங்களை ஏற்கும் போக்கு. “அவர்கள் மகள் அரண்மனையில் இருக்கிறார், ஆனால் எங்களது மகள் கல்லறையில் வைக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ள பெண் உரிமை ஆர்வலர் அலி ஓமித்வாரியின் கருத்து, சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த 2022-ல் மஹ்சா அமினியின் ஹிஜாப் தொடர்பான மரணம் தொடர்ந்து நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான போராட்டங்களைத் தூண்டிய நிலையில், இப்போது ஷம்கானி குடும்பத்தின் திருமண நிகழ்வு, இரட்டை நிலைப்பாட்டின் சான்றாக கூறப்படுகிறது.
மேலும், ஹிஜாப் விதிகளை அமல்படுத்துவதற்காக 80,000 அறநெறி காவலர்களை ஈரான் நியமிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இத்தகைய வீடியோ வெளியாகி உள்ளது ஆட்சியை அதிரவைத்துள்ளது. முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர், கடற்படை தளபதி, அணுசக்தி பேச்சுவார்த்தை பிரதிநிதியாகவும் இருந்த ஷம்கானி, தற்போது உச்ச தலைவர் கமேனியின் நெருக்கமான பிரதிநிதியாக செயல்பட்டு வருவது இந்த விவகாரத்திற்கு மேலும் அரசியல் சர்ச்சயை உருவாகியுள்ளது.
