மும்பை போலிஸாரின் துரித நடவடிக்கையால் ஒரு நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஜாகேஸ்வரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தவறுதலாக கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஒருவரைப் பற்றி தகவல் கிடைத்ததும், போலிஸ் வண்டி விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. போலிஸார் கயிற்றின் உதவியுடன் கால்வாய்க்குள் இறங்கி, அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டார். போலிஸாரின் இந்தத் துணிச்சலான செயலை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். “உயிர் காத்த எங்கள் ஹீரோக்களுக்கு சலாம்” என்றும், “மும்பை போலிஸாருக்கு மனமார்ந்த நன்றி” என்றும் பல பயனர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Police (@mumbaipolice)

“>

மேலும், ஆறு மாதங்களாகக் காணாமல் போயிருந்த நான்கு வயது சிறுமி ஆரோஹியை அவரது குடும்பத்துடன் மும்பை போலிஸ் மீண்டும் சேர்த்து வைத்தது. இந்த முயற்சிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.