கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த பிரபீஷ் (37) என்பவர் கூலி தொழிலாளி. திருமணமானவரான இவர், அனிதா (32) என்ற பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த தொடர்பில் அனிதா கர்ப்பமாகியதும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் பிரபீஷை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பிரபீஷ், தனது மற்றொரு கள்ளக்காதலியான ஆலப்புழை கைநகரியைச் சேர்ந்த ரஜனி (38) என்பவருடன் சேர்ந்து அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் வெளிப்பட்டது.
திட்டமிட்டபடி, 2021 ஜூலை 9-ஆம் தேதி, ரஜனி அனிதாவின் வாயை பொத்திக்கொள்ள, பிரபீஷ் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார்.
இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபணமான பிரபீஷுக்கு, ஆலப்புழை கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் இந்த மாதம் 23ஆம் தேதி தூக்கு தண்டனை வழங்கியது.
அதே வழக்கில் 2வது குற்றவாளியான ரஜனியும் நேற்று அதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிவில், அவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கள்ளகாதல் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் ஆக இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
