குடும்பத் தகராறு காரணமாகக் கணவனின் காலை மட்டும் அடித்து உடைப்பதற்காக, மனைவி ஒருவரே 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துக் கூலிப்படை ஏவித் தாக்கியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்குள் இருந்த கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக, கணவருக்குப் பெரிய அளவில் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த மனைவி, அவருக்குக் கடுமையான பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக இந்த விசித்திரமான முடிவை எடுத்துள்ளார்.
இதற்காகக் கூலிப்படையினரை ரகசியமாகத் தொடர்புகொண்டு, கணவனின் காலை மட்டும் அடித்து நொறுக்குவதற்காக 4 லட்சம் ரூபாயைப் பேசி முடித்து அட்வான்ஸும் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், கணவனைத் தனியாக மடக்கி மிகக் கொடூரமாகத் தாக்கி அவரது காலை உடைத்துள்ளனர்.
இந்த பயங்கரத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரைக் நெஞ்சைப் பதற வைத்து வருகிறது.
இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட மனைவி மற்றும் அவருக்குத் துணையாக இருந்த கூலிப்படையினரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
