இங்கிலாந்தைச் சேர்ந்த 43 வயதான ஆடம் ஹால் என்பவர், சுமார் ஏழு ஆண்களுக்குத் தெரிந்தே எச்.ஐ.வி (HIV) நோயைப் பரப்பியதாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த ஆடம் ஹால், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்குத் தனது உடல்நிலை குறித்து முன்பே தெரியும் என்று வாதிட்டுள்ளார். குறிப்பாக, ஒரு நபர் தன்னிடம் பேசும்போது “உன்னுடைய எச்.ஐ.வி பாதித்த விந்து எனக்கு வேண்டும்” என்று மெசேஜ் செய்ததாகவும், எச்.ஐ.வி பாதித்தவர்களுடன் உடலுறவு கொள்வதில் அந்த நபருக்கு ஒருவித ஈர்ப்பு (Fantasy) இருந்ததாகவும் ஆடம் ஹால் நீதிமன்றத்தில் திடுக்கிடும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து சாட்சியமளித்த ஆடம், தான் முறையான மருந்துகளை உட்கொண்டு வருவதால் வைரஸின் தாக்கம் மற்றவர்களுக்குப் பரவாத நிலையிலேயே (Undetectable) இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், ஆன்லைன் செயலிகள் மூலம் பழகிய அந்த இளைஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் தான் உடலுறவு கொண்டதாகவும், பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்களே வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட ஆண்கள் தரப்போ, ஆடம் ஹால் தனது உடல்நிலை குறித்த உண்மையை மறைத்து தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். “அனைத்து இளைஞர்களும் பொய் சொல்கிறார்களா?” என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டதற்கு, “ஆமாம், அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என ஆடம் பதிலளித்துள்ளது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
