இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட கோர தற்கொலைப் படைத் தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர். நேற்று 31 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 31 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 169 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த கொடூர தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த நாட்டு அரசாங்கம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
