மீன்பிடிப்பதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற முயன்ற இளம்பெண் ஒருவர், எதிர்பாராத திடுக்கிடும் சம்பவத்தால் அதிர்ந்துபோய் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பெண் தான் மீன் பிடிக்கும் முறையைக் காட்டுவதற்காக, வலையொன்றை எடுத்து அழகாகச் சுழற்றி, வட்ட வடிவில் அது சுழல, குளத்தை நோக்கிச் சிறிது சிறிதாக நகர்ந்து சென்று மீன் பிடிக்க முயற்சித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாகத் தண்ணீருக்குள் இருந்து வாயைப் பிளந்தவாறு ஒரு முதலை அவரைத் தாக்க முயன்று வேகமாக வெளிவந்தது.

திடீரெனத் தாக்கிய முதலையைக் கண்ட அந்தப் பெண், பதறியடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடும் காட்சி தான் இந்தக் காணொளியின் முக்கிய அம்சமாகும். அதிர்ஷ்டவசமாக அவர் முதலையின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பினார். இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “மீன் பிடிப்பது சரிதான், ஆனால், வீடியோ மோகத்தில் மீன்பிடிப்பது உயிருக்கே ஆபத்தாகிவிடும்,” என்றும், “மீன் பிடிப்பது கேமராவுக்கு மட்டுமல்ல, சில சமயம் முதலையின் உணவுப் பட்டியலுக்கும் ஆகிவிடலாம்,” என்றும் நக்கலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ மற்றும் ‘வியூஸ்’ பெறுவதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் போக்கிற்கு இந்தச் சம்பவம் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by Unknown (@bista___07)