இன்றைய நவீன உலகில், சில இளைஞர்கள் எது விளையாட்டு, எது ஆபத்து என்பதை அறியாமல், சமூக வலைதளங்களில் ‘லைக்குகள்’ பெறுவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நெருப்புடன் ஆபத்தான முறையில் விளையாடும் காணொளிகள் கடந்த சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நபர் தனது நண்பர் மூலம் அக்குளில் உள்ள முடியைத் தீ வைத்துப் பற்ற வைக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காணொளியில், இளைஞர் ஒருவர் தனது கைகளை உயர்த்தி நிற்க, அவரது நண்பர் அவருக்குத் தெரியாமல் பின்புறம் சென்று லைட்டர் மூலம் அவரது அக்குளில் உள்ள முடிகளைத் தீயிட்டுப் பற்ற வைக்கிறார். நெருப்பு சட்டென்று பரவ, தீக்காயம் ஏற்பட்டு வலியால் அவர் அலறித் துடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்தச் செயல் வெறும் விளையாட்டு அல்ல, இது ஒரு விபரீதமான செயல் என்றும், இதனால் ஏற்படும் காயங்கள் அல்லது விபத்துக்களுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய ஆபத்தான விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் மற்றும் விளையாடுபவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

View this post on Instagram

 

A post shared by Mofiz Ahmed (@amar_comedy_club)