உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை உறைய வைக்க மட்டுமே திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும். பிஸ்கட், வேப்பர் பிஸ்கட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளுடன் கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது