பாகிஸ்தான் அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் உஸ்மான் தாரிக், தனது விசித்திரமான பந்துவீச்சு முறையால் தற்பொழுது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இவரைப் பற்றிய செய்திகள் அதிகம் பரவி வருகின்றன.

மேலும் உஸ்மான் பந்து வீசும் போது கையை நேராக நீட்டாமல், சற்று வளைந்த நிலையில் வைத்துப் பந்து வீசுவது ‘சக்கிங்’என்ற சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பதிலளித்துள்ள தாரிக், தனது கையில் இயற்கையிலேயே இரண்டு எலும்பு மூட்டுகள் இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் தனது கையை மற்றவர்களைப் போல முழுமையாக நேராக நீட்ட முடியாது என்றும், இது தனது உடல் அமைப்பில் உள்ள ஒரு மாற்றம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“>

இதனால் உஸ்மான் தாரிக்கின் இந்த இயற்கை உடல் நிலையை ஐசிசி ஏற்கனவே இருமுறை ஆய்வு செய்து, அவரது பந்துவீச்சு சட்டப்பூர்வமானது என்று சான்றிதழ் அளித்துள்ளது. கையை நேராக நீட்ட முடியாத காரணத்தாலேயே அவர் அவ்வாறு பந்து வீசுகிறார். மேலும், இவர் பந்து வீசும் போது திடீரென ஒரு நொடி நின்று பந்து வீசுவது பேட்டர்களின் கவனத்தை சிதறடிக்கிறது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட, உஸ்மானின் இந்த ஆக்ஷன் சட்டப்பூர்வமானது தான் என்று அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், தனது இந்த மர்மமான பந்துவீச்சு மூலம் இந்திய பேட்டர்களுக்கு உஸ்மான் தாரிக் பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.