இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து மடிக்கணினியை பயன்படுத்தும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

அதாவது பைக்கில் பின்னால் அமர்ந்து பெங்களூரில் பெண் ஒருவர் லேப்டாப்பை பயன்படுத்தியவாறு சென்றுள்ளார். அதில் அவர் வேலை செய்கிறாரா அல்லது வேறு ஏதாவது லேப்டாப்பில் தேடுகிறாரா என்பது குறித்து தெரியவில்லை. அந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் சென்றது அவரது உயிருக்கு மிகவும் ஆபத்தானது என்று வீடியோவை பார்த்த பலரும் கூறி வருகிறார்கள். தற்போது அது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.