இந்தியாவில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பயிர் கழிவுகளை எரிப்பது மற்றும் தொழிற்சாலை மாசு ஆகியவற்றால் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொதுவாக காற்று மாசு அளவு என்பது 50க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற பட்சத்தில் டெல்லியில் தற்போது முன்னுரை கடந்து மிகவும் மோசமான சூழல் நிலவி வருகிறது. அரியானா மாநிலத்தில் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதையும் தடை செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் டெல்லி எல்லையை ஒட்டி உள்ள உத்திர பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.