புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்கும் கடைசி நிமிடத்தில், தனக்கு வந்த ரகசிய அழைப்புகள் மற்றும் ஆசைவார்த்தைகள் குறித்தும், தனது தனித்துவமான அரசியல் அறம் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் முதன்முறையாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி மாலை 4:45 மணிக்கு தாம் செய்தியாளர்களைச் சந்திக்கச் சென்றபோது கூட, மிக நம்பகமான ஒரு சோர்ஸிலிருந்து தனக்கு அவசர போன் கால் ஒன்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அழைப்பில், “நீங்கள் தவெக-வுக்கு ஆதரவுக் கடிதம் கொடுக்க வேண்டாம், உங்களைத்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக டிக்ளர் பண்ணப் போகிறோம், தயவுசெய்து இப்போது பிரஸ் மீட் பண்ணாதீங்க” என்று தடுத்ததாக திருமா அதிர வைத்துள்ளார். ஆனால், தான் அதற்கு மறுப்பு தெரிவித்து கும்பிடு போட்டுவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்து ஆதரவை அறிவித்ததாகக் கூறியுள்ளார்.
“நான் சென்டிமெண்ட்டாகப் பார்க்கிறேன், வார்த்தையைக் காப்பாற்ற நினைக்கிறேன் என்று என் வெல்விஷர்ஸ் பலர் என் மீது கடிந்துகொண்டார்கள்; ஆனால் இடதுசாரிகளோடு இணைந்து எடுத்த முடிவில் நான் உறுதியாக நிற்க விரும்பினேன், அதிகாரத்திற்காக நான் காத்திருக்கவில்லை” என்று திருமாவளவன் உடைத்துப் பேசியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
