மயிலாடுதுறையில் நடைபெற்ற ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ராமசாமி அவர்களுக்குப் பதில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் போன்றோரே தங்களுக்கு ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்று குறிப்பிட்டார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சம வாய்ப்பாக 117 ஆண்களையும், 117 பெண்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்ட மாநாடு வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.