தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு விரோதமாக செயல்படும் நிர்வாகிகளை நீக்குவது மற்றும் புதியவர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற பணிகள் அதிரடியாக நடக்கிறது.

அந்த வகையில் தற்போது அதிமுகவின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ் பாபு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது இவர் மீது பண மோசடி மற்றும் அடிதடி என ஏராளமான புகார்கள் குவிந்ததால் தற்போது அவருடைய மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக திருமங்கலம் மோகனை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அதோடு வி எஸ் பாபுவை அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இபிஎஸ் நியமித்துள்ளார்.