அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் உக்கிரமான போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மூன்று அதிரடி நிபந்தனைகளை உலக நாடுகளுக்கு முன்னால் வைத்துள்ளார். முதலாவதாக, ஈரானின் இறையாண்மை மற்றும் நாட்டின் சட்டபூர்வமான உரிமைகளை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக, இந்த யுத்தத்தினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய நஷ்டஈட்டை (Reparations) வழங்க வேண்டும் என்றும் அவர் கறாராகத் தெரிவித்துள்ளார்.

​மூன்றாவதாக, வருங்காலங்களில் ஈரான் மீது எந்தவிதமான ஆக்கிரமிப்பும் நடத்தப்படாது என்பதற்கான உறுதியான சர்வதேச உத்தரவாதத்தை (International Guarantees) அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “யுத்தத்தை நிறுத்த இது ஒன்றே வழி” எனப் பெசெஷ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிபந்தனைகளைத் துச்சமாக மதித்தால் போர் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால், சர்வதேச வல்லரசுகள் இப்போது பெரும் நெருக்கடியில் தவித்து வருகின்றன!