மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் மீது சரமாரியாகக் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும், ஈரான் அரசு இன்னும் சிதையாமல் உறுதியாக இருப்பது அமெரிக்க அதிபர் டிரம்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாலும், அந்நாட்டு மக்கள் இன்னும் அரசின் முழு கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும், தற்போதைய சூழலில் ஆட்சி கவிழும் வாய்ப்பு இல்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது ரகசிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானின் புதிய தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானை எப்படிக் கவிழ்ப்பது என்பது தெரியாமல் அமெரிக்காவும் இஸ்ரேலும் திணறி வருகின்றன.
ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருந்தாலும், ஈரானின் பிடி இன்னும் தளராததால் இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
