ஈரானிய கடற்படையின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 4, 2026 அன்று இந்தியாவில் நடந்த ‘மிலன்-2026’ கடற்பயிற்சியை முடித்துவிட்டு ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த கப்பல், இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த ஈரானிய அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகாலை 3:25 மணியளவில் அமெரிக்கா ஏவிய முதல் டார்பிடோ கப்பலின் முக்கிய பாகங்களைச் சிதைத்து அதைச் செயல்படவிடாமல் முடக்கியதாகவும், அந்த நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சர்வதேச விதிகளின்படி செயலிழந்த கப்பலை மீண்டும் தாக்கக்கூடாது என்றாலும், ஈரானிய வீரர்களைக் கொல்லும் நோக்கத்துடன் அமெரிக்கா இரண்டாவது டார்பிடோவைத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.

இரண்டாவது டார்பிடோ தாக்குதலால் கப்பலில் இருந்த 104 ஈரானிய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலுக்குள்ளான கப்பல் அதிகாலை 5:08 மணிக்கு உதவி கோரி சிக்னல் அனுப்பிய சில நிமிடங்களிலேயே கடலில் மூழ்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மற்றொரு போர்க்கப்பலை டார்பிடோ மூலம் மூழ்கடித்தது இதுவே முதல் முறையாகும்.

“>

 

இந்த கோர விபத்தில் கடலில் தத்தளித்த 32 ஈரானிய வீரர்களை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். போர்க்கள விதிகளை மீறி திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மனிதநேயமற்ற தாக்குதல் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.