ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், “சீனாவின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் ஷுயெகின் கணித்துள்ள புதிய தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் வெறும் வான்வழித் தாக்குதல்களுடன் நின்றுவிடாது என்றும், அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களை ஈரான் மண்ணில் இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும், ஈரான் மீது கடுமையான நெருக்கடி கொடுப்பார் என்றும் பேராசிரியர் ஜியாங் கணித்தவை உண்மையானதால், தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த மோதலில் அதிநவீன ஆயுதங்களை விட, சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஈரானின் ராஜதந்திரமே வெற்றி பெறும் என்று பேராசிரியர் ஜியாங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தரைப்படை மூலம் தாக்குதல் நடத்தினால், அது ஈரானிடம் அமெரிக்காவிற்கு ஒரு பெரிய தோல்வியைப் பெற்றுத் தரும் என்பது அவரது கணிப்பாக உள்ளது.

தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஈரான் அமெரிக்காவை எதிர்கொண்ட விதத்தைப் பார்க்கும்போது ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது உலக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.