ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ஒரு பெண்ணிடம், முகமது சாதிக் என்ற நபர் செல்ஃபி எடுப்பது போல நடித்து மிக மோசமாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. டெல்லி இந்தியா கேட் போன்ற கூட்டமான இடத்தில், அந்தப் பெண் தடுத்தும் கேட்காமல் அந்த நபர் அநாகரீகமாகச் சீண்டியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. நம் நாட்டை நம்பி வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் இப்படி வக்கிரமாக நடந்துகொள்வது மிகப்பெரிய அவமானமாகும்.
"A Russian girl harassed in India." 🤡👹
A pervert named Mohd Sadiq harassed a Russian tourist publicly in the name of selfie.
Several foreign women tourists have faced such harassment at India Gate. Think about the image of India we are creating globally. pic.twitter.com/OoyFupUQNU
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 1, 2026
இது போன்ற ஒரு சிலரின் கீழ்த்தரமான செயலால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்குக் கெட்ட பெயர் உண்டாகிறது. ‘விருந்தினரைத் தெய்வமாக மதிக்க வேண்டும்’ என்று சொல்லும் நம் நாட்டில், ஒரு பெண்ணுக்குப் பொது இடத்தில் பாதுகாப்பு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனிமேல் யாரும் இது போன்ற அசிங்கமான செயல்களில் ஈடுபட பயப்படுவார்கள்.
