கரூர் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். மணிகண்டன் கொத்தனார் வேலைக்கு சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளமையுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. கடந்த 14ஆம் தேதி அந்த இளம் பெண்ணுடன் மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மணிகண்டனின் தந்தை சரவணன் காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
கடந்த 23ஆம் தேதி இரவு 9 மணிக்கு மணிகண்டன் மற்றும் அந்த இளம் பெண்ணை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ரயில் பாதையில் மணிகண்டன் இரண்டு கால்களும் துண்டாக்கப்பட்டு தலையிலும் அடிபட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக மணிவண்ணனின் உறவினர்கள் கரூர் திருச்சி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை சமாதானப்படுத்த முடியாததால் போலீசார் குண்டுகட்டாக வெனில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
