சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற பரிதாபகரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹர்ஷிதா என்ற மாற்றுத்திறனாளி இளம்பெண், வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார். இருவரது காதலுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தர்ஷன் திருமணத்திற்கு பின்னடைவு காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹர்ஷிதா, தனது உறவினர்களுடன் தர்ஷனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.
அந்த சந்திப்பின் போது ஹர்ஷிதாவின் பழைய செயல்கள் சரியல்ல என தர்ஷன் கூறியதால், ஆத்திரமடைந்த ஹர்ஷிதா சம்பவ இடத்திலேயே அந்த வீட்டின் 7வது மாடிக்கு சென்றார். அனைவரும் பார்ப்பதற்குள் கீழே குதித்த தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாபகரமான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலியின் தற்கொலையை அடுத்து, போலீசார் தர்ஷனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
