திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் பேரூராட்சி அருந்ததியர் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் சன்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யா அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக திவ்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.