எலான் மஸ்க்- ன் X தளத்தில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கணக்கு வைத்துள்ளனர். அவற்றில் அடிக்கடி தங்களுடைய கருத்துக்கள் மற்றும் முக்கிய அப்டேட்டுகள் உள்ளிட்டவற்றை பதிவிடுவார்கள். இதில் போலி கணக்குகளை கண்டுபிடிக்க பிரபலங்களுக்கு புளு டிக் வழங்கப்படுகின்றது. இதற்காக தனி சந்தாவும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது X தளத்தில் பிரபலமான 2500 பயனாளர்களுக்கு எலான் மஸ்க் இலவசமாக புளூ டிக் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.