விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நவநீத் கவுர் ராணா. மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பியாக உள்ள அவர் நாக்பூரில் பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவருடைய கணவரும் பாஜக ஆதரவாளருமான ரவி ராணா பட்நேரா தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.